கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கோப்பி குடி மக்கள் நடாத்திய சிவவிழா

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கோப்பி குடி மக்கள் நடாத்திய சிவவிழா நேற்று(24) திங்கட்கிழமை  இரவு இடம்பெற்றது.

கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசை, சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதல் போன்றனவும் நடைபெற்றன.

பூசைகள் அனைத்தும் மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான குழுவினரால் நடாத்தப்படுவதுடன், எதிர்வரும் 30.09.2018ம் திகதி தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும், மறுநாள் காலை(01.09.2018) தீர்த்தோற்சவமும் நடைபெற்று ஆலய மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது.