டெலோ தலைவர் பொத்துவில் பயணம்

டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பொத்துவில் விஜயம்!
3ஆம் திகதி ஜனாதிபதியுடன்  சந்திப்பு: பலனின்றேல் வீதிமறியல்போராட்டம்!
காரைதீவு  நிருபர் சகா

பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்கள்  மேற்கொண்டுவரும்
நிலமீட்புப் போராட்டம் இன்று(26)  44நாளாக தொடர்கின்றது.

அங்கு டெலோ தவைரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்
நேற்று(24) திங்கட்கிழமை  விஜயம்செய்தார். அவருடன் திருக்கோவில்
பிரதேசசபைத்தவிசாளர் இ.வி.கமலராஜனும் சென்றிருந்தார்.

பொத்துவில் 60ம் கட்டை கனகர் கிராம மக்கள் தங்களது நிலத்தை
மீட்டுத்தருமாறு கோரி போராட்டம் நடாத்தும் இடத்திற்கு பாராளுமன்ற
உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விஜயம்
செய்து அந்த மக்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டறிந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொத்துவில் 40ம் கட்டை கனகர் கிராம மக்கள்
தாங்கள் குடியிருந்த தங்கள் நிலத்தை வன பரிபாலனசபையினர் ஆக்கிரமித்து
தங்களது மீள் குடியேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் மீண்டும் அதனை
தங்களுக்கு பெற்றுத்தருமாறும் வேண்டினர். இல்லாவிடில் வாகனங்களை மறித்து
வீதிமறியல் போராட்டத்திலீடுபடவேண்டிநேரிடும் என்றும் கூறினர்.

இதற்கு பதிலளித்த  செல்வம் அடைக்கலநாதன் எதிர்வரும் 3ம் திகதி பொதுமக்கள்
சிலரையும் அழைத்துக்கொண்டு தான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும்இ அந்த
முயற்சி வெற்றியளிக்காவிட்டால் அடுத்த நாள் தானே வந்து  தனது தலைமையில்
வீதியை மறித்து மக்கள் போராட்டம் நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.