மட்டக்களப்பு மாவட்ட நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த தமிழர்களும் கவனம்செலுத்த வேண்டும். Viedio

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவுற்ற மக்கள் மீது புலம்பெயர்ந்த நம்மவர்களும் நானும் பார்வை செலுத்த வேண்டியுள்ளது. இம்மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த நமது மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கவேண்டிய தேவை உள்ளதால் முனைப்பு போன்ற நிறுவனங்கள் இதற்கு முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

முனைப்பின் 9வது கதம்பமாலை ஞாயிற்றுக்கிழமை சுவிஸ்லாந்து லுற்சேன் மாநகரில் அமைப்பின் தலைவர் மா.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர், தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல்வேறு காரணிகளால் எமது மக்கள், தங்களது எதிர்காலங்களை தீர்மானிக்ககூடத்தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். இவ் அறியாமையைப் போக்க எமது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
மட்டக்களப்பில் நுண்கடன் பிரச்சினை தற்போது பாரிய பிரச்சினையாக உள்ளது. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து, நமது மக்கள் விடுபட வாழ்வில் சிநிதனை முறையில் சீறிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி தமிழர்களுடைய வாழ்வியல் முறையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

நீங்கள் உடலால் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்தினை நினைத்து அம்மக்களுக்கு உதவிக்கொண்டிருப்பது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகி;றது. அதற்காக அந்த மக்களின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

முனைப்பு நிறுவனம் எதுவித ஆராவராமுமின்றி தனது சேவையை செய்து கொண்டிருப்பதை நான் அறிவேன். நீங்கள் முனைப்பு நிறுவனத்திற்கு வழங்கும் பணம் உரியவர்களுக்கு சரியான முறையில் சென்றடையும் என்ற நூறுவீத உத்தரவாதத்தினை வழங்குகின்றேன்.

பல தடவைகள் கூறியிருக்கின்றேன் இலங்கையில் நாம் கலை பண்பாடுகளையும், ஆன்மீகத்தினையும் தொலைத்தவர்களாக இங்கு வாழ்ந்து வருகின்றீர்கள் ஆனால் புலம்பெயர்ந்த உறவுகளோ அதனைக் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என அங்கு கூறிய விடயங்களை இன்று நேரில் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகி;றேன். நமது பிரதேசத்தில் பல்வேறு அமைப்புக்கள் உதவிகளைச் செய்து வருகின்றன. இவ்வமைப்புக்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து வேலைசெய்தால் திட்டமிட்டமுறையில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளலாம் என்றார்.