விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் : பெண்கள் கவனஈர்ப்பு.

கிழக்குப்பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் இறுதிக்கிரியை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசிக்குளம் இலக்கம் 108, கட்டுக்குளத்தில் இன்று(24) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இறுதி ஊர்வலத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, கிராமப்பெண்கள் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்றும் இடம்பெற்றது.

இதில், பெண்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த பெண் விரிவுரையாளர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.