கூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது! – உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்

“வடக்கு மாகாண சபை கூடுதல் பணிகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்” எனவும், “உரிய நேரத்தில் வடக்கு மாகாண சபைக்குரிய எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்போம்” எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“தனது தெரிவுகள் குறித்து வடக்கு மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னுடன் பேசலாம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிலர் பிரிந்து போக விரும்புவதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவு என்ற கருத்து வெளியில் வருகின்றது” எனவும், “எனினும் கூட்டமைப்பை எவராலும் சிதைக்கவே முடியாது” எனவும் இரா.சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“எவரும் என்னை வழிநடத்தவில்லை” எனவும், “தமிழ் மக்களின் நலன் கருதியே நான் செயற்படுகின்றேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“எமது பிரச்சினையில் இந்தியா அக்கறையாக இருக்கின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை நாங்கள் எங்களுக்கு முரண்பாடான விஜயமாகப் பார்க்கவில்லை” எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.