குடிநீர்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் வரட்சியாக மாறும்

ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை-146யு கிராமசேவையாளர் பிரிவைச் சேர்ந்த பெரியபுல்லுமலை கிராமத்தில் பெரியபுல்லுமலைஏத்தம்,
கோப்றேசனடி, பாலர் பாடசாலையடி,பெருவட்டைப் குளப்பகுதி, என்னும் பல பெயர்களைக் கொண்ட இ;ந்த இடத்தில் குடிநீர்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் இப்பிரதேசம் வரட்சியாக மாறும் இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும்,ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் மான்புமிகு ஜனாதிபதிக்கு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப் பகுதி மக்களின் பார்வையில் வனவலத்திணைக்களத்திற்குரிய காணியாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட வருடங்களுக்கு முதல் இக் காணியில் மக்கள் குடியேற முயற்சித்தபோது இது அரச காணியென கிராமசேவையாளரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் காணியோடு தொடர்புடைய பெருவட்டைக்குளம் என்பது சிறு நீர்பாசனக் குளமாகும். இக்குளத்தை சில வருடங்களுக்கு முன்பு சோபா நிறுவனம் புனரமைத்து இந்த வருடமும் இக்குளம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1978ம்ஆண்டு சூறாவெளியால் பாதிக்கப்பட்ட மரங்களை மரக்கூட்டுத்தாபனம் விற்பனை செய்வதற்காக இந்தப் பகுதியில் (எதிர்க் காணியில்) மரக்கூட்டுத்தாபனம் அமைத்து மரங்களை அறுத்து விற்பனை செய்த இடமாக இருந்தது. இவ்வேளையில் இவர்கள் நீண்டகாலமாக ஒரு கிணற்றை புனரமைத்து குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். யுத்த காலத்தில் 1990ம்ஆண்டுக்குப் பின் இவ்விடத்தில் 25ற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்ந்து இறுதியாக குறிப்பிட்ட பலர் இருந்து, இராணுவத்தினரால் ஒருவர் சூடப்பட்ட நிலையில் சொந்த இடங்களுக்கு திரும்பினர். இத்தோடு இக்காணியில் இருப்பதற்கான ஒப்பங்களுக்கும் விண்ணப்பித்திருந்தனர்.

இக் கிராமத்தில் (பகுதியில்) பிரதேசத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் அருகாமையில் இருக்கின்ற வயல் நிலங்கள், குளங்கள், காடுகள் போன்ற பகுதிகளில் வரட்சி ஏற்படும். இதன் காரணமாக இந்த பிரதேசத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு கடந்த காலங்களில் உத்தியோக பூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடிக்கு கீழுள்ள சூழலில் தட்டு முறையிலேயே நீர் இருக்கும். குறிப்பிட்ட நீரை உறிஞ்சினால் அந்தப் பகுதி நீரற்ற பகுதியாக மாறி வரட்சித்தன்மையை உருவாக்கும். உருவாகினால் இப்பகுதியிலுள்ள பல இடங்கள் உவர்தன்மையாக மாறும். இச் சூழல் குறிப்பிட்ட காலத்திற்கு பிற்பாடு வெப்பம் நிறைந்த பகுதியாக மாறும். அருகிலுள்ள குளத்தைப் பொறுத்தவரையில் மழை நீரும், காட்டுத் தண்ணீரும்(வெள்ளம்) தேங்கி நிற்பதே வழக்கம். வருடாவருடம் இக்குளம் வரட்சி ஏற்படுவது வரலாறாகும். இக்குளத்தில் தண்ணீர் தானாக ஊற்றெடுப்பதில்லை. தனிநபரின் இலாபத்திற்காக இப்பிரதேசத்தை வரட்சி உள்ள பகுதியாக மாற்றுவதற்கு எந்த மனிதரும் செயற்படக்கூடாது.

இந்த விடயத்தை சம்மந்தப்பட்டோர் கைவிட வேண்டும் கைவிடுவதன் மூலமே இந்தப் பகுதி மக்களின் நல்லெண்ணத்தைப் பெறமுடியும். இப்பகுதி மக்களைப் பொறுத்தவரையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஐந்து தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்து ஒவ்வொரு நாளும் காட்டு யானைகளுக்கு அஞ்சி ஒருநேர உணவிற்குக் கூட அலைகின்ற நிலையில் இக் கிராமத்தில் இப்படியான திட்டத்தை செய்வது ஆரோக்கியமான விடயமல்ல.

எனவே இதை இனவாதமாக எடுத்துக் கொள்ளாமல் இத்திட்டத்தை கைவிடுமாறும், இதை தடுத்து நிறுத்த மாண்புமிகு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் இதை செவி சாய்க்காமல் அசைண்டயினமாக செய்வதற்கு முற்படும் பட்சத்தில் இப்பிரதேசத்தைப் பாதுகாக்க தமிழ் சமூகமாகிய நாங்கள் நிற்பந்திக்கப்படுவோம். என அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றினார்.