சித்தாண்டி மக்களுக்கான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்-ஞா.ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சித்தாண்டி கிழக்கு,சித்தாண்டி-01 மக்களுடனான நேரடி சந்திப்பு ஒன்றை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் நடாத்தியிருந்தனர். இந்நிகழ்வை சித்தாண்டி வட்டார தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமை ஏற்று நடாத்தியிருந்தார்.

வீட்டு பிரச்சனை, வீதி பிரச்சனை போன்ற இரு பிரச்சினை முக்கியமாக பேசப்பட்டது. அதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச , மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  ஏராளமான வீட்டுத் திட்டங்களை வழங்கி இருக்கின்றார்.

காணி,வீடு இல்லாத குடும்பங்களுக்கு அரச காணி வழங்கி வீடும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு வீதி புனரமைப்பிற்குரிய பணத்தினை பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலமும் அமைச்சுகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று முடிந்தளவு தீர்வு பெற்று தரப்படும் எனவும் குறிப்பிடார்.