மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் சபாநாயகம் சதீஸ்குமாருக்கு சாமஶ்ரீ தேசமான்ய விருது.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சமூக சேவையாளர்களுக்கான சமாஶ்ரீ தேசமான்ய தேசிய விருது வழங்கும் விழா மட்டக்களப்பு, ஏறாவூர் அலிஹார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று   சனிக்கிழமை மாலை (22.09.2018ஆம் திகதி ) ஒன்றியத்தின் தலைவர்  சாமசிறி நிசாந்த தர்சன ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் சபாநாயகம் சதீஸ்குமார் சாமசிறி தேசமான்ய விருதினைப் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.