மகிழடித்தீவு வைத்தியசாலையின் ஆளணி உருவாக்கல் தொடர்பில் கலந்துரையாடல்.

மகிழடித்தீவு வைத்தியசாலையின் ஆளணி தொடர்பில், இலங்கை திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் மூ.கோபாலரெத்தினம் நேற்று(23) ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியுள்ளார்.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்டு, பார்வையிட்டு, வைத்தியசாலையின் ஆளணி தொடர்பில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியசாலையின் சமூக அங்கத்தவர் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, வைத்தியசாலையின் தேவையறிந்து, வைத்தியசாலைக்கான புதிய ஆளணிகளை உருவாக்குவதற்கான அனுமதிகளைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

கலந்துரையாடலில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, வைத்தியர் ரி.தவநேசன், மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் அதிபர் பொ.நேசதுரை ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.