மட்டக்களப்பில் சமுர்த்திமுகாமையாளரின் வீட்டில் கொள்ளை

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் சமுர்த்தி முகாமையாளர் ஒருவரின் வீடொன்றில் 35 பவுண் நகையும் மூவாயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவையும் கருத்திற் கொள்ளாது வீட்டின் மேல் ஏறி ஒட்டை உடைத்து உட்புகுந்த தனியொரு கொள்ளைக்காரரே தனது  கைவரியை காட்டி சென்றுளடளார்
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
 களுதாவளையில் இடம்பெற்ற உறவினரின் மரண வீடொன்றிற்காக சென்றிருந்த வேளையில் இரவு ஒன்பது மணியளவிலையே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மதிலைக் கடந்து வீட்டிற்கு பின்புறமாக  வந்த கொள்ளையர்  நீர்த்தாங்கி பொருத்தப்பட்டிருந்த வழியால் வீட்டின் மேல் ஏறி ஓட்டினை உடைத்து உட்புகுந்துள்ளார். உட்புகுந்தவர் அறைக்குள் இருந்த அலுமாரியை உடைத்து அதற்குள் இருந்த நகை 35 பவுணையும் காசு மூவாயிரம் ரூபாயையும் கொள்ளையிட்டு சைமையலறை கதவினைத் திறந்தே வெளியேறிச் சென்றுள்ளார்.
குறித்த கொளளைசம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினர் மற்றும்  களுவாஞ்சிகுடி பொலிசார் ஆகியோர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்….பழுகாமம் நிருபர்