கிழக்குப்பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர்சடலமாக இன்று (21) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்திலிருந்து விடுமுறை செல்வதாக சக நண்பர்களிடம் கூறிவிட்டு சென்ற விரிவுரையாளர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
 வவுனியா, ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை   சேர்ந்த நடராசா போதநாயகி என்ற  ( 29 வயது) உடைய விரிவுரையாளரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் பேக் மற்றும் செருப்பு இன்று  (21)  காலை   கடற்கரையில்  மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று பிற்பகல் விரிவுரையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது உயிரிழப்பு  தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விரிவுரையாளரது உடலம் கோணேஸ்வரம் செல்லும் பாதையிலுள்ள கடலருகில் காணப்பட்டுள்ளது.அரது கணவர் வருகைதந்து சடலத்தை ஆடையாளம் காட்டியதுடன் இவர் தற்கொலைசெய்வதற்கான எதுக்கள் இல்லை .இது ஒரு கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளயிட்டுள்ளார்
சடலம் கடற்கரையில் உள்ள நிரில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.தொடர்பாடல்துறையில் விரிவுரையாளராக பணியாற்றும் இவர் மிக அண்மையில் திருமணமானவர் என்றும் நேற்றய தினம் விடுமுறையில் வீடு செல்வதாக கூறி  நகரைநோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளார் என பல்கலைகழக நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு மரணவிசாரணை அதிகாரி வருகைதந்து பார்வையிட்டதுடன் குறித்த பெண் கற்பவதியாக இருப்பதனால் விஷேட சட்டவைத்திய பரிசோதனையின்பின்னரே சடலம் ஒப்படைக்க முடியும் என தெரிவித்தநிலையில் விஷேட சட்டவைத்திய அதிகாரி விடுமறையில் இருப்பதனால்  வேற மாவட்ட வைத்திய மனைக்கே அனுப்பவேண்டும் அதற்கு முன்னர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் பார்வையிட்டு உத்தவையடுத்து மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிசாரைகேட்டுக்கொண்டார்.மாலை வரை சடலம் கடற்கரையிலேயெ காணப்பட்டன. பல்கலைக்கழக சகபாடிகள் விரியாளர்கள், வளாக முதல்வர் உட்பட பல மாணவர்களும்  பிரசன்னமாகியிருந்தனர்.