பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு!
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 16 ஆம் நாள்
திருவிழாவான   வனவாசம் செல்லல் நிகழ்வு நேற்று புதன்கிழமை சிறப்பாக
நடைபெற்றது.இதில் முள்ளு காவடிகள்இ பறவைக்காவடிகள் என பெருந்திறளாக
பக்தர்களும்இ பாண்டவர்களுடன் வனவாசம் சென்று வந்தனர்.மகாபாரத வரலாற்றை
வெளிப்படுத்தும் வகையில் திருவிழா சடங்குகள் 18 நாட்கள் சிறப்பாக
நடைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். உற்சவ காலத்தில்
கல்முனை பிரதேசமே கோலாகலமாக காட்சியளிப்பதுடன் நாட்டின் பல பாகங்களில்
இருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதருவதும்
குறிப்பிடத்தக்கதாகும்.வருடாந்த உற்சவம் (04.09.2018) செவ்வாய்க்கிழமை
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 21 ஆம் திகதி தீமிதிப்பு 22 ஆம் திகதி
சனிக்கிழமை பாற்பள்ளையத்துடன் உற்சவம் நிறைவுபெறும்.வனவாச நிகழ்வு
நடைபெறுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு   சகா