மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகை மாதாந்த பௌர்ணமி கலை விழா

மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகை மாதாந்த பௌர்ணமி கலை விழா காந்திப் பூங்காவில் நடைபெற்றவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும், மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து நடாத்தும் மூன்றாவது பௌர்ணமி கலை விழாவானது இம்மாதம் 24 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மட்டக்களப்பு காந்திப்பூங்கா மூன்றலில், மாநகர கலை கலாசார குழுவின் தலைவரும், மாநகர உறுப்பினருமான வே.தவராஜா அவர்களின் தலைமையில், மாநகர முதல்வர் தி.சரவணபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சு.ஶ்ரீகாந், மாநகர ஆணையாளர் ந.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பில் மருவி வரும் தமிழர்களின் கிராமிய நடனங்கள் மற்றும் பறங்கிய இனத்தவர்களின் கபறிஞ்சா நடனங்களும், கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் மாணவி செல்வி துர்க்கா அவர்களின் கதை காலாட்சேபமும், நகைச்சுவை நாடகமும் மேடையேற்றப்படவுள்ளது. மேலும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக கதை மாமணி மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் அதே சாயலில்  கதை கூறிவரும் அவரது இளவல் சக்திரூபன் அவர்களும் கதை கூறி பார்வையாளர்களை  சிரிக்க வைக்கவுமுள்ளார்.