கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை சிறிய நீர்ப்பாசனத்திட்டத்தில் 41217 ஏக்கரில் விவசாயச் செய்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், கோரளைப்பற்று வடக்கு – கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்ட பிரதேசத்தில் 2018- 2019 பெரும்போகத்தில் 41217 ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் திங்கட்கிழமை மாலை (17) கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால், கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், கோரளைப்பற்று மத்தி பிரதேச சபைச் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விவசாயப் பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு தொடங்குதல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் இக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன. இதன் போது, விதைப்பு ஆரம்பம், அறுவடைத் திகதிகளும் தீர்மானிக்கப்பட்டன.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் விவசாய நடவடிக்கைகளின் போது கால்நடைகள் மயிலத்தமடு, பெரியமாதவணை பிரதேசங்களுக்கு அகற்றுதல் வேண்டும்.

இக் கூட்டத்தில் வங்கிகளின் கடன்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடைப்பிரச்சினை, யானைப்பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுடன், தேசிய உரச் செயலகம், விவசாய கமநல காப்புறுதி, வன ஜீவராசி கள் திணைக்களம், வன வளத் திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்களம் சார் விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் விவசாய, கமநல சேவைகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்திய அதிகாரி, பிரதேச செயலக அதிகாரிகள், மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.