ஆசிரியர் சேவை சார்ந்த சம்பளப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை

ஆசிரியர் சேவை சார்ந்த சம்பள பிணக்குகளைத் தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த முயற்சியில் தொழிற்சங்க அமைப்புக்கள் உட்பட சகல தரப்புக்களினதும் கருத்துக்களைப் பெறுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல வருட காலமாக முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வேறு பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு ஆசிரியர்களின் தொழில் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.