மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு

மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் 2018ஃ2019ம் வருடத்தின் 4வது புதிய தலைவராக அரசரெத்தினம் கோகுலதீபன் நேற்று சனிக்கிழமை மாலை கல்லடி கிறீன் கார்டன் கோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் பதவியேற்றுக்கொண்டார்.

இவ் விழாவில் பிரதம அதிதியாக 2019ஃ2020 ரோட்டறி ஆண்டிற்காக தலைவராக தெரிவு செய்யப்படவுள்ள மாவட்ட ஆளுநர் எஸ். கருணாகரன், விசேட அதிதியாக மாவட்ட உதவி ஆளுநர் கன்டி பிறேவோ, கௌரவ அதிதியாக ஸ்டீபன் புஸ்பராசா மற்றும் ரோட்டறிக் கழகத்தின் அங்கத்தவர்கள், சமூக சேவையாளர்கள், மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2014ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு கெரிடேச் ரோட்டறிக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள்இ கரையோர சுத்திகரித்தல் வேலைத்திட்டங்கள்இ இரத்ததான முகாம்கள்இ ஊனமுற்றோர்களுக்கான கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல்இ கரையோர குடும்பங்களுக்காக மலசலகூட வசதிகள் வழங்குதல்இ முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளை ஏற்பாடு செய்தல்இ பாடசாலைகளுக்கான நூலக புத்தகங்கள் வழங்குதல்இ மரநடுகை போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

புதிய தலைவராக பதவியேற்கவுள்ள அரசரெத்தினம் கோகுலதீபன் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் கற்றார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான முதுமானிப் பட்டதாரியான கோகுலதீபன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரம் பேணல் திணைக்களத்தில் 13 ஆண்டுகளாக திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.