எத்தகைய எதிர்ப்பு வரினும்; பொத்துவில் பொது மைதானம் அமைந்தே தீரும்!

பொத்துவில் பிரதேசசபை மாதாந்தஅமர்வில் உபதவிசாளர் பார்த்தீபன் சூளுரை!
(காரைதீவு  நிருபர் சகா)
 
காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரையில் வந்தவர்கள் பொத்துவில் பொது மைதானத்தை எதிர்ப்பது விநோதமல்ல. எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும்; பொத்துவில் பொது மைதானம் நிர்ணயிக்கப்பட்ட சின்னவட்டியில் அமைந்தே தீரும்.
இவ்வாறு பொத்துவில் பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பைச்சேர்ந்த உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன் சூளுரைத்தார்.
 
பொத்துவில் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு சபைத்தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
 
பொத்துவிலுக்கான பொது விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சினால் 50கோடி ருபா செலவில் தமிழ்மக்கள் செறிந்துவாழும் சின்னவட்டி என்ற இடத்தில் அமையவிருக்கிறது. அந்த இடம் தொடர்பாக எழுந்த சர்ச்சைமீது  உரையாற்றியபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு உபதவிசாளர் பார்த்தீபன் மேலும் உரையாற்றுகையில்:
குறித்த பொதுமைதானம் வட்டிவெளி விபுலாநந்தவித்தியாலயம் பொத்துவில் மெ.மி.தக.பாடசாலை இன்ஸ்பெக்டர்ஏற்றம் தமிழ்வித்தியாலயம் சிங்கள வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகளுக்கும் சமயதலங்களுக்கும் மத்தியில் அமையவிருக்கிறது. அருகில் பொலிஸ்நிலையம் நீதிமன்றம் விகாரை பள்ளிவாசல் கோயில் என்பனவெல்லாம் அருகருகே உள்ளன.
இன்ஸ்பெக்டர்ஏற்றம் குண்டுமடு வட்டிவெளி ஆகிய 3தமிழ்க்கிராமங்களுக்கு மத்தியில் இந்த உத்தேசமைதானம் அமையிவிருக்கிறது.எனவே தமிழ்மக்களுக்குத்தான் இது வரப்பிரசாதம்.
 
சுற்றவர தமிழ்மக்கள் செறிந்துவாழும் பிரதேசமாகும். இந்த இடத்தில் மைதானம் அமைவதால் எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்குத்தான் நன்மை அதிகம். அதற்கு மாணிக்கவாசகர் விளையாட்டரங்கு என்றபெயர் வைப்பதற்கும் தயார் என்று உறுப்பினர் மஜீத் கூறினார்.
காலடியில் இருக்கும் இந்த காணியை விட்டுவிட்டு 10கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஆத்திமுனையில் மைதானத்தை அமைப்பதா? எமது பிள்ளைகள் அங்கு செல்வார்களா?
 
எமது  தவிசாளர் வாஸித் உள்ளிட்ட அனைவரும் இனமதபேதமின்றி செயற்பட்டுவருகின்றனர். 60ஆம்கட்டையடியில் போராட்டத்திலீடுபட்டுவரும் கனகர்கிராம தமிழ்மக்களுக்கு 24மணிநேரமும் குடிதண்ணீரை வழங்குவது எமது சபை. எனவே இங்கு இனவாதத்தை முன்வைப்பது அழகல்ல. 
 
1947இல் ஜின்னா எந்த நோக்கத்திற்காக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்தாரோ அதேநோக்கத்தில் அன்றிருந்த ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் இலங்கையில் செயற்பட்டிருந்தால் ஈழப்போராட்டமும் இடம்பெற்றிருக்காது.பல லட்சம் உயிர்களும் இழந்திருக்காது. இனமுரண்பாடுகளும் தோன்றியிருக்கமாட்டாது.
 
அப்படி காட்டிக்கொடுத்த எட்டப்பன்  வரலாற்றில்வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணியினர் தமிழ்மக்கள் நன்மையடையும் இப்பொதுமைதானத்தை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதொன்றும் விநோதமல்ல.அதையிட்டு அலட்டவும் தேவையில்லை. 
எனவே யார் எதிர்த்தாலும் அந்த சின்னவட்டியில் மாணிக்கவாசகர் பொதுவிiளையாட்டுமைதானம் அமைந்தே தீரும். என்றார்.
ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினர் ஏ.எம்.ஏ.மஜீத் உரையாற்றுகையில்:
பொத்துவில் முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழ்மக்களது நலன்களுக்கு முரணாக நடக்கமாட்டார்கள். அவர்களது நிலத்தை அபகரிக்கமாட்டார்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பாகிய  பொத்துவில் பொதுமைதானம் கனிந்துவருகின்றபோது சபையிலுள்ள சசிதரன் என்கின்ற ஒரேயொரு உறுப்பினர் மட்டும் இனவாதத்தை கக்கிவிட்டுச் சென்றிருப்பது நல்லதல்ல.
இலங்கைச்சட்டப்படி ஒருவர் இனவாதக்கருத்துக்களை வெளியிட்டால் 18வருட சிறைத்தண்டனை அனுபவிப்பார். 
நாம் பொத்துவில் சபையில் தமிழர்களை எப்போதும் அரவணைத்தே வந்துள்ளோம். எமக்கு சந்தர்hப்பம் இருந்தும் உபதவிசாளராக பார்த்தீபனை நியமித்து அழகுபார்க்கின்றோம்.
 
இனவாதம் பேசுவது கூடாது. பொத்துவில் மக்கள் சகலஇனங்களுடனும் சகோதரமாக வாழ்பவர்கள். உண்மையில் நாம் இனவாதம் பேசத்தொடங்கினால் நீங்கள் தாக்குப்பிடிக்கமாட்டீர்கள்.
அந்த இடம் 2009இல் சாமிநாதனால் உறுதி எழுதப்பட்டது. அப்படி யாராவது அந்தக்காணிக்குரிய உரிமம் வைத்திருந்தால் பிரதேசசெயலாளரிடமோ எம்.பியிடமோ ஆலயத்திடமோ காண்பித்து  எதிர்ப்பைக்காட்டலாம். அதைவிடுத்து இனவாதம் பேசுவது கூடாது. 
வரப்போகின்ற பொதுமைதானத்திற்கு காணிச்சொந்தக்காரராகவிருந்த மாணிக்கவாசகரின் பெயரையோ அல்லது அவரது மருமகனான சரவணபவனின் பெயரையோ சூட்டுவதற்கும் தயாராகவுள்ளோம். பெயர் எதையாவது வைக்கலாம். ஆனால் மைதானம் அமையவேண்டும் என்றார்.
 
தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸித் உரையாற்றுகையில்:
நாம் ஒற்றுமைப்பட்ட சமுகமாக வாழந்துவருகின்றோம். வரப்போகும் பொதுமைதானம் அமையப்போவது தமிழர்பிரதேசம். உண்மையில் இதற்கு முஸ்லிம்இளைஞர்கள் எதிர்hக்கலாம் என்றுதான் எண்ணினேன்.ஆனால் தமிழ்தரப்பில் ஒருசிலர் மாறிசிந்திப்பது நல்லதல்ல. எனவே குறுகிய இனவாத சிந்தனையை உதறித்தள்ளிவிட்டு சகோதரத்துடன் நிம்மதியாகவாழ்வோம். என்றார்.
 
முன்னாள் தவிசாளரும் இந்நாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம்.மர்சூக் உரையாற்றுகையில்;:
இனவாதம் பேசுவோரும் சண்டித்தனம் காட்டுவோரும் ஜனநாயகத்தில் தோல்வியடைவாhர்கள். பொதுபலசேன நல்ல உதாரணம். இனவாதம் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.
அன்று ஆளமையுள்ள எஸ்.ஜே.வி.செல்லவநாயம் பெருந்தலைவர் அஸ்ரப்பை எப்படி மதித்தார்? என்பதனை நாமறிவோம்.  அதுதான் ஒற்றுமை.அதுதான் வரலாறு.
வடக்கு கிழக்கில் தமிழர்முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் எப்போதோ வெற்றிபெற்றிருக்கமுடியும். தவறுகள் நல்லபாடம். விடுதலைப்போராட்டத்தில் பொத்துவில் பல முஸ்லிம்கள் பலியாகினர்.
பொத்துவில் புலிகளுக்கு வழங்கிய விலை அதிகம். அதில் பல பணக்கார இளைஞர்கள் சேர்ந்து போராடினார்கள். அதனால் இழந்தவைகள் அதிகம். தமிழ்மக்கள்  மு.காவைச்சேர்ந்த எனக்கு வாக்களித்துள்ளனர் என்றால் அதுதான் எமது பழக்கம். அன்று எம்.சி.கனகரெத்தினத்திற்கு முஸ்லிம்கள் நிறையவாக்களித்தார்கள்.
பணம் ஒற்றுமையைப் பலப்படுத்தாது. மு.கா. நிறை பணம் ஒதுக்கியது.நான் பணத்தால் மமதை கொள்ளவில்லை. மக்கள் ஆதரவு தேவை. என்றார்.
 
உறுப்பினர் எம்.எச்.ஏ.றஹீம் உரையாற்றுகையில்:
பொத்துவில் 9முஸ்லிம் கிராமசேவை பிரிவுகளையும் 3 தமிழ்சிங்கள பிரிவுகளையும் கொண்டது. இங்கு 17முஸ்லிம் உறுப்பினர்களும் 4தமிழ்உறுப்பினர்களும் இருக்கிறோம். மிகவும் ஒற்றுமையாகவாழும் இப்பிரதேசத்தில் மைதானம் தமிழ்ர்பிரிவில் அமைவது மகிழ்ச்சிக்குரியது. அந்த இடத்தை நாம்சுவீகரிக்கப்போவதுமில்லை.தொழப்போவதுமில்லை. தேவையானால் பணம்கொடுத்து வாங்கவும் தயாராகவுள்ளோம்.
30வருட யுத்தத்தால் கண்ட பலன் என்ன? சண்டித்தனத்தாலும் இனவாதத்தாலும் ஒன்றுமே ஆகப்போவதில்லை.
 
உறுப்பினர் ஏ.எம்.எம்.தாஜூடீன் உரையாற்றுகையில்;
2002இல் பொத்துவிலில் புலிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடிய காலம்.முன்னாள் எம்.பி அசீஸ் தனதுஒதுக்கீட்டில் அங்கு உதவினார். அப்படி அந்தக்காணி வேறொருவரின்காணி என்றால் அவர்கள் அன்று எதிர்த்திருப்பார்கள்.
1987இல் பிரதேசசபைக்கட்டடத்தை பெறமுனைந்தபோது கருணா இங்கு அராஜகம் புரிந்தகாலம். தவிசாளர் மர்சுக் நான் எல்லாம் துப்பாக்கிமுனையில் எச்சரிக்கப்பட்டோம். 17இரவுகள் நாம் வேறிடத்தில் தூங்கநேரிட்டது.
இங்க 21உறுப்பினர்களிருந்தும் இதுவரை அதிகூடிய 6லட்சருபாவை ஜேசிபிக்காக தவிசாளர் செலவழித்திருப்பது உறுப்பினர் சுபோதரனுக்காக மட்டுமே. பொத்துவில் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்கு எதிரானவர்களல்ல. நாம் தமிழ்மக்களை மதித்து நடப்பவர்கள்.என்றார்.
 
 
மேலும் உறுப்பினர்களான ஆதம்சலீம் எம்.துரைரெட்ணம் கே.சுபோதரன் எம்.ஏ.நியாஸ்  திருமதி எம்.எம்.ஜே.ஜூனைதா  ஆகியோருட்பட பலரும் மைதானத்தின் அவசியம்கருதி உரையாற்றினர்.