மட்டக்களப்பில் தியாகி திலிபனுக்கு அஞ்சலி.

தியாகி திலீபனின் 31,வது ஆண்டு ஆரம்ப நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மாவடிமுன்மாரியில் தியாகி திலீபனின் திருவுருவ படத்துக்கு தீபம் ஏற்றி மலர்ஞ்சலியும் அகவணக்கமும் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச இலங்கை தமிழரசு கட்சிக் கிளையால் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

தியாகி திலீபனுக்கு வணக்கம் செலுத்திய பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் சிரமதானப்பணி முதலாம் கட்டமாக நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பட்டிப்பளை பிரேதேச இலங்கை தமிழரசு கட்சி கிளையின் தலைவரும் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளருமான சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முதலாம் கட்டமாக இந்த சிரமதானப்பணிகள் இடம்பெற்றுள்ளது மேலும் இரண்டாம் கட்ட சிரமதானப்பணிகள் விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தவிசாளர் சி.புஷ்பலிங்கம் தெரிவித்தார்