மாவடிமுன்மாரியில் நடமாடும் வைத்தியசாலை திறந்து வைப்பு.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில், நடமாடும் வைத்தியசாலையொன்று  செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையினை, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கிரேஸ் நவரெட்ணராசா, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ரி.தவனேசன் ஆகியோர் திறந்து வைத்ததுடன், வைத்திய பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

தாந்தாமலை, கச்சக்கொடிசுவாமிமலை, மாவடிமுன்மாரி, பனிச்சையடிமுன்மாரி, மக்களடியூற்று, திக்கோடை, களுமுந்தன்வெளி, விடுதிக்கல், நெல்லிக்காடு போன்ற கஸ்டப்பிரதேச கிராமங்களில் உள்ள மக்கள் வைத்தியசாலை சேவையினை பெற்றுக்கொள்வதற்கு நீண்டதூரம் செல்லவேண்டிய நிலை இதுவரை காலமும் இருந்துவந்த நிலையில், குறித்த மக்கள், வைத்திய சேவையினை இலகுவில் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ்வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் கீழும், இவ்வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களைக் கொண்டும், வாராத்தில் ஒருநாள் இவ்வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.