மோட்டார் வாகன திணைக்களத்தினால் விரைவில் புதிய வேலைத்திட்டம்

தேசிய அடையாள அட்டையில், சாரதி அனுமதிப்பத்திர தகவல்களை உள்ளடக்குவது தொடர்பில்  ஆராயப்பட்டு வருவதாக, மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (13), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், தேசிய அடையாள அட்டையில், சாரதி அனுமதிப்பத்திர தகவல்களை உள்ளடக்குவது தொடர்பில், கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சாரதி பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த சாரதிகளை உருவாக்கும் நோக்கில், மோட்டார் வாகன திணைக்களத்தினால், இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.