தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு

தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு  செயற்பாட்டுக்குழுவினர் விடுக்கும் வேண்டுகோள்
கடந்த 2017 ஆம் ஆண்டு தரவை மாவீரர் துயிலுமில்லம் மாவடிமுன்மாரி துயிலுமில்லம் ஆகிய இரண்டு துயிலுமில்லங்களை மிகவும் சிரமத்தின் மத்தியில் மக்களதும் போராளிகளினதும் சேகரிக்கப்பட்ட பணத்தின் மூலமாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்திருந்தோம்.
அந்தவகையில் கடந்த வருடம் பந்தம் கொழுத்துவதற்காக காட்டில் தடிகள் வெட்டியே பயன்படுத்தியிருந்தோம் ஆனால் இம்முறை கம்பிவலைத்து தீப்பந்தங்கள் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.
அதன் பிரகாரம் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கும் முதற்கட்ட துப்பரவுப்பணி முன்னெடுப்பதற்கும் எவரும் முன்வராத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது ஆகையினால் தேசவிரோத சக்திகள் இதனை சாதகமாக கையிலேடுத்து துயிலுமில்ல நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதற்கு ஏதுவான சூழ்நிலை காணப்படுகின்றது.
ஆகையினால் புலம்பெயர் தேசத்தின் உறவுகள் துயிலுமில்லங்களை புனரமைத்து நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் அத்துடன் எதிர்வரும் 15.09.2018ஆம் திகதி காலை தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முதற்கட்ட சிரமதானப்பணிகள் அப்பிரதேச மக்களைக்கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக்குழுவின் சார்பில் கணேசன் பிரபாகரன் இன்று 11 நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின் போது அவர் கருத்துத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.