திருமலையில் 36 வருட கல்விச்சேவைக்கு பாராட்டு

36 வருட கல்விச்சேவைக்குப்பாராட்டு

பொன்ஆனந்தம்

கிழக்கின் முன்னணி தேசிய பாடசாலையான ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியி 18 வருடங்கள் சேவையாற்றியதுடன் 9 வருடங்கள் அதிபராக கடமையாற்றி 36 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுக்குவந்துள்ள திருமதி சுலோசனா ஜெயபாலனனின் பாராட்டு விழா மிகவும் விமர்சையாக கல்லூரி சமூகத்தினால் நடாத்தப்பட்டது.

புதிய அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜன் தலமையில் நடந்த இந்நிகழ்வில் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆரம்ப பூஜைகள் இடம்பெற்ற பின்னர் ஆலய தர்மகர்த்தா சோ.இரவிச்சந்திரக்குருகளால்; அதிபருக்கு கௌரவிப்புக்கள் இடம்பெற்று, கல்லூரிக்கு ஊர்வலமாக விருந்தினர்கள் சகிதம் அழைத்துவரப்படுவதனையும், கல்லூரி விழா மண்டபத்தில் ஓய்வுநிலை அதிபர் பாராட்டு சான்றிதழ்வழங்கி கௌரவிக்கப்பட்டதனையும் இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளால் நடாத்தப்பட்ட கலைநிகழ்வுகளையும் இங்கு காணலாம் விருந்தினர்களான கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம், மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மாகாண சுகாதாரத்திணைக்களப்பணிப்பாளர் டாக்கடர் அருள்குமரன்,மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் ஆ.விஜயானந்த மூர்த்தி வலயக்கல் விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன் உள்ளிட்டோருடன் பல அதீதிகளும் கலந்து சிறப்பித்தனர். தி கட்டைபறிச்சான்விபுலானந்தாவில் ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த இவர்,திசேனையூர் மத்திய கல்லூரியில் இடைநிலைக்கல்வியை தொடர்ந்தார். பின்னர் யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைமுடித்து கல்விச்சேவையில் பல சாதனைகளைச்செய்து கல்வி நிருவாகசேவைதரத்தை பூர்தி செய்தவராவார்.இவர் அண்மையில் பருதா அணிதலுக்கு தடைவிதிதமை தொடர்பான சர்சையில் சிக்கி யிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.