கருணாவை  துரோகி என ஏன் நீங்கள் இன்னும் கூறாமல் இருக்கின்றீர்கள்.தலைவர் பிரபாகரன் சொன்ன பதில்

தேசவிடுதலைக்காக கிழக்கு மாகாண போராளிகள் ,மட்டக்களப்பு மக்கள் சிந்திய இரத்தம்  கருணா செய்ததியாகங்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

கருணா உட்பட மட்டக்களப்பு போராளிகளின் தியாகத்தை நான் ஒருபோதும் கொச்சைப்படுத்தவிரும்பவில்லையென தலைவர் பிரபாகரன் தங்களிடம் கூறியதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் கிருஸ்ணா அம்பலவாணர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறப்புரையாற்றிய கிருஸ்ணா அம்பலவாணர் கருணாவை  துரோகி என ஏன் நீங்கள் இன்னும் கூறாமல் இருக்கின்றீர்கள் என நாங்கள் கேட்டதிற்கு தலைவர் பிரபாகரன் சொன்ன பதில்  இதுவாகும் என தெரிவித்தார்.