முனைப்பினால் வாழ்வாதாரம் கல்விக்கான உதவிகள்

முனைப்பினால் வாழ்வாதார மற்றூம் கல்விக்கான உதவி வழங்கிவைப்பு. முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது, முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவானத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் முனைப்பு நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவாலகத்தில் வைத்தே இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது, வழ்வாதார ஊக்குவிப்பு மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிரான்குளத்தைச் சேர்ந்த வறிய குடும்பத்தின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு தையல் தொழிலுக்கான தையல் இயந்திரம் வழங்கப்பட்டதுடன் மட்/கல்/புலிபாய்தகல் அ.த,க,பாடசாலையில் கல்வி கற்கும் துலைவில் இருந்து பாடாசாலைக்கு செல்லும் வறிய மாணவர் இருவரது போக்குவரத்து வசதி கருதி துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் ,நிருவாக சபை உறுப்பினர் விஜயா,முனைப்பு சுவிஸ் கிளை உறுப்பினர் சந்திரன் மற்றும் மட்/கல்/புலிபாய்ந்தகல் அ.த,க,பாடசாலை அதிபர் சத்தியவரதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்