பட்டிருப்பு தொகுதிக்கான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்

க.விஜயரெத்தினம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் பெரியகல்லாறு கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(9.9.2018)பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் தருமலிங்கம்-ஹெங்காதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில்  அவர்களின் ஆலோசகர் சபாவதி நோவேட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ரீ.ஹெங்காதரன்,கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரீ.யஜேந்திரசா,வெல்லாவெளி இணைப்பாளர் ஏ.ஜெயராஜ் கண்ணன்,அமைப்பாளரின் செயலாளர் ஜோன் பிரசன்னபிள்ளை,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

பட்டிருப்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள்,வீதிபுனரமைப்பு,வீடமைப்புக்கள்,குளங்கள் புனரமைப்பு,மக்களின் தேவைகள் என்பனவற்றை இணங்கண்டு செய்வதற்குரிய விடயங்கள் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.மேலும் வெல்லாவெளி, மண்டூர்,பட்டிப்பளையில் கட்சி அலுவலகம் மிகவிரைவில் திறப்பதற்குரிய விடயங்கள் ஆராயப்பட்டது.