உணவில் விஷம் வைத்து பிரபாகரனை கொலை செய்ய முயற்சிக்கவில்லை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து, அவரை கொலைச் செய்ய ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இ​தேவேளை, ‘ஜனபலய’ எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பக்கற் பாலில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.