உரிய காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இல்லை- சிறிசேன

உரிய காலத்திற்கு முன்னதாக நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பில் தேவையற்ற கரிசனை காணப்படுவதாக தெரிவித்துள்ள சிறிசேன சிலர் முன்கூட்டியே தேர்தல்;கள் இடம்பெறும் என அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த நான் தயாரில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை எப்போது நடத்துவது என தீர்மானிக்கும் அதிகாhரம் என்னிடம் மாத்திரமே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜனபெரமுனவும் ஐக்கியதேசிய கட்சியும் தங்கள் அரசியல் பலத்தினை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு இன்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனிநபர்களை மையமாக வைத்து உருவாகும் அரசியல் கட்சிகள் தற்காலிகமானவை  எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தெளிவான நோக்கத்துடனான அரசியல் இயக்கங்களே மக்களுக்கு அவசியம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின் 19 வது  திருத்தத்தின் கீழ் அடுத்த தேர்தலிற்கு பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும ; பிரதமர் பதவியே முக்கிய பதவியாக காணப்படும் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைவரும் நாட்டிற்கு சிறந்த பிரதமரை தெரிவு செய்வது குறித்து கவனம் செலுத்தவேண்டும்,ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து கரிசனை செலுத்தக்கூடாது எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.