போராட்டகாலத்தை நினைவுபடுத்திய மட்டக்களப்பு.நகரில் முஸ்லிம் மக்கள் மக்கள் முழு ஆதரவு( படங்கள்)

புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில். சில முஸ்லீம் அரசியல் வாதிகளினால் முஸ்லீம்கள் இன்றைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது எனவும் அது முஸ்லீம்களுக்கு எதிரான போராட்டம் என்று கூறி இனவாத சிந்தனைகளை விதைத்த போதும் அநாமதேய துண்டு பிரசுரங்களை வெளியிட்ட போதும் மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லீம் வர்த்தகர்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவை தெரிவித்து தங்களது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர்.

முஸ்லீம் வர்த்தகர்களின் இன்றைய ஒற்றுமை பலராளும் பாராட்டதக்கதாக அமைந்துள்ளதாக சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய ஹர்த்தால்  தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இது தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த குடிநீர் தொழிற்சாலையினை நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.பல்லின சமூகங்கள் வாழும் நாட்டிலே தனியொரு சமூகத்தினரின் அரசியல் செயற்பாட்டுக்கும்,அபிவிருத்திக்கும் ஜனாதிபதி, பிரதமர் கருணைகாட்டுவது தவிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய ஹர்த்தாலின் நோக்கமாகும்.இவ் ஹர்த்தாலானது தமிழ்மக்களினதும்,தமிழ் உணர்வாளர்களினதும் ஆதரவுடன் நடைபெறுகின்றது.