மண்முனை தென்மேற்கு பகுதியில் மாதிரி வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்படவிருக்கின்ற மாதிரி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று(05) புதன்கிழமை இடம்பெற்றது.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மாதிரி கிராம வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள முனைக்காடு கிராமத்தில் 25வீடுகளும், விடுதிக்கல் கிராமத்தில் 23வீடுகளும், பனிச்சையடிமுன்மாரியில் 15வீடுகளும் அமைப்பதற்கான அடிக்கல்லுகளே இன்று நடப்பட்டன.

அமைச்சர் சஜித் பிரமதாசவின் திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.