கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம்

மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் முன்னெடுத்து வரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்புக்கு வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் பல வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

 

 

குறிப்பாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தினை முழுமையாக மறித்திருந்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியை ஆக்கிரமித்து, அப் பகுதிக்கான போக்குவரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளதுடன் அப் பகுதியில் மெழுகு வர்த்திகளை ஏந்திய வண்ணம் சத்தியகிரகப் போராட்டமொன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

 

அத்துடன் லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.