மாணவியை மோதித் தள்ளிய சந்தேக நபர் விளக்கமறியலில்

;பொன்ஆனந்தம்

திருகோணமலை தம்பலகமம் கமநலசேவை நிலயத்திற்கு முன்னால் வீதியில் சென்று கொண்டிருந்த உயர்தர மாணவியை ; வாகனத்தால் மோதி தள்ளி தப்பிச்சென்ற சந்தேக நபரை வரும் 19.09.2018 வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தம்பலகமம் பொலிசார் தெரிவித்தனர்.

இன்றைய தினம் இந்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு காலை 11.15 மணியளவில் கந்தளாய் நீதிமன்றில் நீதிபதி துசித்த டம்மிக்க உதுவவிதான முன்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஏலவே கைதாகி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிண்ணியா வைச்சார்ந்த குறித்த சந்தேக நபரை தம்பலகமம் பொலிசார் ஆஜார் செய்திருந்தனர்.

குறித்த மரணம் தொடர்பாக இறந்தவரான சுந்தரலிங்கம் பிரியதர்சினி(18)யின் சகோதரன் மற்றும் உறவினர்கள் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் குறித்த விடயம் விபத்தல்ல என்பதனை நீதவானுக்கு தெளிவுபடுத்தினர்.

“எனது சகோதரி திருகோணமலையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த உயர் தரத்தில் கற்றுவந்தார்.வரும் 2019இல் பரீட்சை எழுதவுpருந்தார். குறித்த தினத்தில் தனது சகோதரியுடன் வீதியால் நடந்து சென்றவேளை பகிடிவதை புரியும் நோக்கில வெள்ளை நிற “ராரா” ரக கப் வாகனத்தைபோக்குகாட்டி சந்தேக நபர் ஓட்டிவந்தநிலையிலே எனது சகோதரியின்மீது மோதி தள்ளியுள்ளார்;. அவர்மட்டுமன்றி கூட ச்சென்ற மற்றய சகோதரியும் காயப்பட்டார் எனவே இது ஒரு விபத்தல்ல” என நீதவானுக்கு தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபரான கிண்ணியாவைசசார்ந்த புகாரி மொகமட் நசீர் ; வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்க வில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.என பொலிசார் மன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.வாகனமும் புதியது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவதினமான 22.08.2018 அன்று மாலை 5.35 மணியளவில் சு.கௌசினி என்பவருடன் தம்பலகமம் கமநல சேவை நிலயத்திற்கு முன்பாக வீதியில் பயணித்து கொண்டிருந்த சமயம் ஆடிஆடி வந்த வாகனம் மோதியதால் சம்பவ இடத்திலேயே பிரியதர்சினி மரணமாகியிருந்தார். மோதித்தள்ளிய வாகனம் குறித்த இடத்திலிருந்து தப்பித்திருந்தது.

கூடச்சென்ற சகோதரி காயங்களுக்குள்ளாகி பின்னர் 5.45 மணியளவில் தம்பலகமம் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு ஆரம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பினர்இறந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சந்தேக நபர் 23.08.2018 அதிகாலை 3.00மணியளவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து நீதிமன்றில் பொலிசார் முன்நிலைப்படுத்திய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவின்பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜார் செய்யப்பட்ட நிலையில் விடயங்களைக்கேட்டறிந்த நீதவான் மேலும் 14 நாட்கள் விளக்கமறிழயல் உத்தரவை பிறப்பித்தார்..