இன்பராசாவுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு.

இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாக கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு..


அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துவத்துடனும் வாழும் இலங்கையில்இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்திலும் திருகோணமலை சம்பூர் 6 வட்டாரத்தை சேர்ந்தவரும் திருகோணமலை கன்னியா மேர்ச்சி கிராமம் இலக்கம் 10 ஐ தலைமையகமாக கொண்ட புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாகிய கந்தசாமி இன்பராசா என்பவர் கடந்த 18.08.2018 அன்று கொழும்பு-06 W.A.சில்வா மாவத்தை இல-83/4 எனும் இடத்தில் ஊடகவியலாளர்களை ஒன்றுகூட்டி ” அரசிடம் சரணடைந்த LTTE போராளிகள் தங்களது ஆயுதங்களை முஸ்லிம் மக்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் முஸ்லிம் மக்களிடம் இருப்பதாகவும் இது ஏனைய இன மக்களுக்கு ஆபத்து என்றும் முஸ்லிம் மக்கள் மீது பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி அதே தினம் அச்செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டது..

இவ்வாறான முஸ்லிம் இனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி தகவல் வெளியிட்டதற்காக ICCPR சட்டத்தின் பிரிவு 3(1) அல்லது 3(2) கீழ் இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய தவறை புரிந்ததற்காக கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும்படி பாதிக்கப்பட்ட இனத்தின் மக்கள் பிரநிதியாக ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 04.09.2018 முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்..

தொடர்ச்சியாக இவ்வாறான இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை தெறிவித்து வரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக நாட்டின் பல பக்கங்களில் இருந்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..