திருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம்

பொன்ஆனந்தம்
திருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம் இன்று காலை 11.00மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.விஷேடமாக இந்நியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வைணவ குருமார்கள் பலரின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டப்பக்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இன்றிலிருந்து தொடர்ந்து பத்துநாட்கள் உற்சவம் இடம்பெற்று மாலையில் விஷேட நிகழ்வுகளும் ஆராதனைகளும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.இங்கு பெருமானின் கொடி எடுத்துவரப்படுவதனையும் குருமார் மந்திரபாராயணம் செய்வதனையும் பெருமான் கொடியேற்றத்தின்பொது நுழைவாயிலில் பிரசன்னமாகியிருப்பதனையும் மற்றும் பிற நிகழ்வுகளின் படங்களை இங்கு காண்க