கொண்டைன்கேணி விளையாட்டுக் கழகத்திற்கு சீருடை வழங்கல்

வாழைச்சேனை கொண்டையன்கேணி ஆர்கலி இளைஞர் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளரும், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான க.கமலநேசனிடம் கழக உறுப்பினர்கள் சீருடை இன்மையால் விளையாட்டினை மேற்கொள்வது கடினமாக உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதன் நிமிர்த்தம் அவுஸ்ரேலியா அன்பாலயத்தின் அமைப்பினரிடம் பிரதேச சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பதினைந்து விளையாட்டு வீரர்களுக்கு சீருடை கொள்வனவு செய்த நிதி வழங்கப்பட்டது.

அந்தவகையில் பதினைந்து விளையாட்டு வீரர்களுக்கு பிரதேச சபை உறுப்பினரால் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் சமூக ஆர்வாளர்களான எஸ்.அரசரெத்தினம் மற்றும் எஸ்.தேவகானந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.