ஆன்மீகத்தை சமுகத்தில் பாய்ச்சவேண்டும்!

இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ!
 (காரைதீவு நிருபர் சகா)
 
இந்தியாவில் அன்று சுவாமி விவோகானந்தர் கூறியதுபோன்று ஆன்மீகத்தை சமுகத்தில் பாய்ச்சவேண்டும். அப்போதுதான் இலங்கை சமகால மாயையிலிருந்துவிடுபடும்.

இவ்வாறு இராமகிருஸ்ணமிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ காரைதீவில் அருளுரையாற்றுகையில் கூறிப்பிட்டார்.
 
இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மற்றும் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிசன் குருகுலத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட  ஸ்ரீமத் சுவாமி தக்சஜானந்தா ஜீ ஆகியோர் நேற்று(31)மாலை காரைதீவுக்கு  முதற்தடவையாக விஜயம்செய்தனர்.
 
காரைதீவிலுள்ள இ.கி.மிசன் சாரதா சிறுமியரில்லத்திற்கு வந்திறங்கிய சுவாமிகளை காரைதீவு சிவானந்தா மற்றும் மிசன் அபிமானிகள் வரவேற்று பாதநமஸ்காரம் செய்தனர். சிவானந்தாபழையமாணவர்களான வெ.ஜெயநாதன் வி.ரி.சகாதேவராஜா கு.ஜெயராஜி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.பின்பு அங்கு கலந்துரையாடலும் போதனையும் இடம்பெற்றது.
 
அங்கு சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மேலும் பேசுகையில்:
சமுகத்தில் ஆன்மீகத்தை பாய்ச்சும் செயற்பாடு ஒரிருநாளில் செய்துவிடமுடியாது. அது மாதங்களாகலாம் வருடங்களாகலாம். என்றாலும் அதுவே சிறந்த மார்க்கம்.
இ.கி.மிசன் துறவி சுவாமி விபுலாநந்தர் பிறந்த அற்புதமான மண் இது. எனவே இங்கு மாதமொருமுறை சத்சங்கம் நடாத்தவேண்டும். டிசம்பரில் பக்திமாநாடு நடாத்துவோம்.வாருங்கள் சேர்ந்து பயணிப்போம்  என்றார்.
 
மட்டு.மாநில இகிமிசன். சுவாமி தக்சஜானந்தா ஜீ பேசுகையில்:
 
இங்கு மிசனுக்கும் சமுகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பை இறுக்கமாக வலுப்படுத்தவேண்டும். மாதமொருமுறை சத்சங்கம் நடாத்தவேண்டும். பெரியோருடன் மாணவர்களின் நிகழ்வுகளும் அடங்கவேண்டும்.டிசம்பரில் பக்திமாநாடு நடாத்தவேண்டும். உண்மையில் இ.கி.மிசன் குருகுலத்திற்குரிய அமைவிடம் இங்குதானுள்ளது.
 
இன்று குடும்பங்களில் பல பிரச்சினைகள். பிள்ளைகளை பெற்றோர்கள் அவரணைப்பதில்லை. மறுதலையாக பிள்ளைகளும் பெற்றோரை கவனிப்பதில்லை.அவர்கள் வேவவேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மாணவர் மத்தியில் ஒழுக்கச்சீர்கேடு நிலவுகிறது. போதைப்பொருள்பாவனையும் நிலவுகிறது.இது பெரும் ஆபத்தான சமிக்ஞை.
 
பலர் தானுண்டு தன்பாடுண்டு என்றவண்ணம் திரிகிறார்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டுபோய்விடும். எனவே சுவாமி கூறியதுபோன்று ஆன்மீகத்தை சமுகத்தில் பாய்ச்சவேண்டும்.
காரைதீவுமண் ஆத்மீகம் கலந்தமண். எனவே இங்கிருந்துதான் எமதுசெயற்பாட்டைத்தொடங்க எண்ணுகின்றோம். ஒத்துழையுங்கள். என்றார்.
 
சந்திப்பு நிறைவடைந்தபின்னர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த இல்லம் மணிமண்டபம் என்பவற்றைப் பார்வையிட்டனர்