சிட்னி நகரில் கைது செய்யப்பட்டவர்அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகனா?

இலங்கையைச் சேர்ந்த கமர் நிஜாம்டீன் என்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற இவர், முன்னாள் இலங்கை வங்கித் தலைவரான காலம் சென்ற சட்டத்தரணி ஜெஹான் கமர் காஸிம் அவர்களின் பேரனும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களின் மருமகனும் ஆவார். இவரது பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த நீதிமன்ற விசாரணை ஒக்டோபர் 24ஆம் திகதி இடம்பெறும்.
குறித்த தகவல் சர்வதேச ரீதியில் பல்வேறு சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மல்கம் டேர்ன்புல், யூலி பிசப் போன்ற முக்கிய தலைவர்களை குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளை நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
மொகமட் நிசாம்டீன் எனும் குறித்த இளைஞர் சிட்னியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றிவந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகொண்டதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர்.
இணையதளம் வாயிலாக குறித்த இளைஞர் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகொண்டுள்ளாரா என்ற கோணத்தில் அவர்மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். (JM)