மட்டக்களப்பில் படையினர் தங்கியுள்ள பாடசாலைக்கட்டடங்கள் விடுவிக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம்,முறக்கொட்டான்சேனை ஆரம்ப கல்விக்கான பாடசாலை,குருக்கள் மடம்கலைவாணி வித்தியாலத்திற்கான கட்டடம் என்பன மிகவிரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்  எம்மிடம் உறுதிப்படுத்தினார்.

நேற்றைய தினம் 28.08.2018 பி.ப 03.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.ஜனாதிபதியின் வடக்கு,கிழக்கு செயலணி உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்தனர்.இதன் போது மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் பொலீசார்,மற்றும் படையினர் வசமுள்ள கற்றல் நிலையங்கள் விரைவாக விடுவிக்க பட வேண்டும் என்பதை குறிப்பிட்டார்.அந்த வகையில் கொக்கட்டிசோலை பொலிஸ் வசமுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு சொந்தமான பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம்,முறக்கொட்டான்சேனை ஆரம்ப கல்விக்கான பாடசாலை,குருக்கள் மடம்கலைவாணி வித்தியாலத்திற்கான கட்டடம் போன்றவை விரைவாக விடுவிக்க படவேண்டும் என  சுட்டிக்காட்டினார். இதனை விரைவாக செய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

மேலும் உன்னிச்சை குள குடி நீர் வினியோகத்தின் போது உன்னிச்சை,உன்னிச்சைக்கு அண்மையிலுள்ள கிராமங்கள் கவனிக்க படாமை கைத்தொழிற் சாலைகள் திறக்கப்படவேண்டிய  அவசியம்,மக்களின் வறுமை,தொழில் வாய்ப்பின்மை வெளி மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிற்றூழியர்கள் நியமிக்கப்பட்டிருத்தல் பற்றியமையெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் எடுத்து விளக்கமளித்தார்.அடுத்த கூட்டத்தின் போது சில பிரச்சினைகளுக்குரிய சாதகமான பதில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் முக்கியமான பாலங்கலான நரிப்புல்தோட்ட பன்குடாவெளி,சந்திவெளி திகிலி வட்டை,கிரான் புலிபாய்ந்தகல்,மண்டூர் குருமண்வெளி,கிண்ணயடி முருகன்தீவுபாலங்கள் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாக ஆவணரீதியான குறிப்பேட்டில் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது.

இதனை தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் உரையாடலின் போது உருத்திப்படுத்தினார்.இதை விட கிரான் குடும்பிமலை,வடமுனை,வீதி என்பனவும் அமைக்கப்படவுள்ளதாக செயலாளர் உரையின் போது தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின்அபிவிருத்தியிலும் கூடுதலான கவனம் செலுத்தவேண்டுமெனவும் இச்சந்திப்பில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..