வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் இருவருக்கு நீர்ப்பம்பிகள்

கோறளைப்பற்று வடக்குப் வாகரை பிரதேச சபைக்குட்பட்ட வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் இருவருக்கு நீர்ப்பம்பிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

வாலம்மண்கேணி பிரதேசத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மரக்கறி உற்பத்தியாளர்கள் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமலநேசன் என்பவரிடம் நீர்ப்பம்பிகள் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அந்த வகையில் பிரதேச சபை உறுப்பினர் அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் மரக்கறி உற்பத்தியாளர்கள் இரண்டு பேருக்கு நீர்பம்பிகள் வழங்கப்பட்டது.

மரக்கறி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடும், பயிர்ச் செய்கையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோக்கில் அவுஸ்ரேலியா அன்பாலயம் அமைப்பு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரின் அரசியல் இணைப்பாளர் க.பிரதீப் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.