களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு நான் இனத்துவேசம் காட்டும் அமைச்சரல்ல

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் குறைகளை நீங்குவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல், ஒரிரு வாரங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் நான் இனத்துவேசம் காட்டும் அமைச்சரல்ல என சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்கள் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு திடிர் விஜயத்தை மேற்கொண்டிருந்த  சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு,வைத்தியர்கள், வைத்தியசாலை ஏனைய உத்தியயோகத்தர் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில்  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை அனைத்து பிரிவுகளும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் நேரில் வந்து பார்க்கின்ற பொழுது நிலமை தலைகீழாக உள்ளது. இந்த பிரதேசத்தைப்பற்றி எனக்கு தெரியும். ஆகவே இந்த பிரதேச மக்களுக்கு சுகாதாரசேவையாற்ற வேண்டிய வைத்தியசாலை இவ்வாறு இருப்பது சம்பந்தமாக நான் கவலையடைகின்றேன். காரணம் அனைத்து வசதிகள் இருந்தும் அதனை இயங்கவைக்க முடியாதநிலை காணப்படுகின்றது.

இன்று  ஒருசில அரசியல்வாதிகள் இனத்துவேசம் காட்டுகின்ற அமைச்சர்போன்று என்னை பலவழிகளிலும் சித்தரித்து வருகின்றனர். நான் மூன்றரை வருடமாக பிரதி அமைச்சராக இருக்கின்றேன். இதில் நான் எந்தவிதபாகுபாடுகளுமின்றி சேவையாற்றி வருகின்றேன். அனைத்து பிரதேசங்களிலும் அவர்களினால் கோரப்படுகின்ற உதவிகளை என்னால் முடிந்தளவு செய்து கொடுத்துள்ளேன் இதில் நான்பாகுபாடு காட்டவில்லை. காட்டபோதுமில்லை நான் நினைத்ததெல்லாம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை சகல வசதிகளுடனும் மிகவும் சிறப்பாக இயங்கொண்டு வருகின்றது என்றுதான் ஆனால் இங்கு நான் வந்து பார்த்து கேட்டு அறிந்த பிற்பாடுதான் பலகுறைபாடுகளுடன் வைத்தியசாலை இயங்கிக் கொண்டிருப்பதனை சாரியாக புரிந்து கொண்டுள்ளேன்

வைத்தியர்கள் பிரச்சினை மிகவும் பெரிய பிரச்சினையாக உள்ளது ஒரு வருடத்திற்கு 1200 வைத்தியர்கள் உருவாக்கப்படுகின்றனர். இதில் இருந்து 200 வைத்தியர்கள் காணமல்போகின்றனர். இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் இருக்கின்றது. ஏங்சிய 1000 வைத்தியர்களையே நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இதில் வைத்தியர் சங்கம் தலையீடு செய்து தங்களது கருத்துக்களையும் முன்வைத்து செயற்படுகின்றது. இன்று நாடு பூராகவும் 150 வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் இல்லாத நிலைகாணப்படுகின்றது. இந்த நிலைமையில்தான் நாங்கள் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

அடுத்ததாகவுள்ள பிரச்சினை வைத்திய நிபுணர்கள் பிரச்சினை கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தளவிலே 13 ஆதாரவைத்தியசாலைகள் உள்ளது அம்பாரை மாவட்டத்திலே கூடுதலான ஆதாரவைத்தியசாலைகள் காணப்படுகின்றது. நாட்டிலே காணப்படுகின்ற வைத்திய நிபுணர்களின் எண்ணிக்கை இரண்டாயிரமாகும். இவர்கள் விரும்புவதெல்லாம் நகரப்புறங்கள் அதாவது பணவசதி கூடிய இடங்களையே விரும்புகின்றனர். இது பெரியசவாலாகவுள்ளது உண்மையில் இந்த விடயத்தில் எமது சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரெட்ண அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். வைத்தியநிபுணர்களை கூடுதலாக உருவாக்குவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்.

சுகாதார அமைச்சரராக அவர் வந்தபொழுது மிகவும் ஏழைமக்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு சிற்நத சேவை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டுவருகின்றார்.  தற்போது 48 மருந்துகளில் விலைகுறைக்கப்பட்டிருந்தது மீண்டும் 24 மருந்துகளின் விலையானது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி புற்றுநோய் வந்த ஒருவருக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளே கொடுக்கப்பட்டது ஆனால் தற்போது ஒருவர் இறக்கும் வரையில் 100 இலட்சம் ரூபாய் பெறுமதி வரைக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதான் இன்று நல்லாட்சி செய்கின்ற வேலை நல்லாட்சி என்ன செய்து கொண்டு இருக்கின்றது என்ற கேள்விக்கு இது சிறந்தபதிலாகும்.

   அடுத்ததாக குடிநீர் பிரச்சினைக்கு நான் அமைச்சுக்கு சென்றதும் உடன் இதற்கான பணத்தினை ஒதுக்கி தருவேன். அது மாத்திரமல்ல வைத்தியசாலையில் உள்ள சிறு திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியினையும் நான் உடன் தந்துதவுவேன். அதுமாத்திரமின்றி வைத்தியநிபுணர்கள் தங்குவதற்கான விடுதிளை கட்டுவதற்குரிய ஏற்பாடுகளையும் ஒரு வாரத்திற்குள் செய்து முடிப்பேன். அடுத்த வருடத்திற்குள் பெரிய தங்குமிட வசதிகளை கட்டி தருவதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வேன் இதனை விட டெங்கு நோயார்களுக்கு அதிவிசேட பத்து கட்டில்களைக்கொண்ட சிகிச்சை பிரிவு ஒன்றினை ஆராம்பிப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான் தற்போது கதைத்துள்ளேன்.

  எனவே நான் இந்த வைத்தியசாலை சம்பந்தமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வைத்திய அத்தியட்சகர் அனைவரையும் எமது அமைச்சுக்கு அழைத்து ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வேன். எனது ஊடகப்பிரிவிடம் வைத்தியசாலையில் காணப்படும் குறைகளை அடயாளங்கட்டு அதனை இருவெட்டில் தருமாறு கோரியுள்ளேன். அந்த கலந்துரையாடலின்போது அதனை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கண்பித்து இந்த அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுத்தருவேன்.

 ஆகவே நான் செய்ய முடியாத விடயத்தை நான் பொது இடத்தில் கூறுபவனல்ல ஆவ்வாறு கூறுகின்ற விடயத்தை செய்யதுகொடுக்க முடியாதவனுமல்ல அதமட்டும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என்னுடைய கொள்ளை செய்து முடிக்க கூடியவேலைகளுக்கே நான் முன்வருவேன் நான் ஓம்மென்றால் ஓம்இல்லையென்றால் இல்லை எனவே இந்தனை வேலைகளையும் உங்களுக்கு கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன் இத்தால் தெரிவிக்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்….பழுகாமம் நிருபர்