கணவன், மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் ; 15 பவுண் தாலிக்கொடி கொள்ளை

மட்டக்களப்பு, பெரியகல்லாறில் உள்ள வீடு ஒன்றிற்குள் இன்று அதிகாலை  புகுந்த கொள்ளையர் அங்கிருந்து 15பவுண் நிறையுடைய தாலிக்கொடியை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார்.

இன்று புதன்கிழமை அதிகாலை களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு முருகன் ஆலய வீதியில் உள்ள வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளையர் ஒருவர் அங்கிருந்த பெண்ணின் 15 பவுண் தங்க தாலிக்கொடியினை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில்முறையிடப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுபொறுப்பதிகாரி ஜெயசீலன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வீட்டில் கணவன் மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சாதுரியமாக உள் நுழைந்து இந்த கொள்ளையினை நடாத்தியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.