சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது?

சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 158 ரூபாவினால் உயத்துவதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, சமையல் எரிவாயுவின் விலை நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விலை அதிகரிப்புடன் 12.5 கிலோகிராம் எடையுள்ள ஒரு சிலிண்டர் 1696.00 ரூபாவாக அதிரிக்கின்றது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதனால் சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ மற்றும் லஃப் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனையடுத்து கடந்த 21 ஆம் திகதி இந்த தீர்மானத்தை வாழ்க்கைச் செலவுக் குழு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.