தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் உடைக்க வேண்டாம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற்சியினால் தமிழீழவிடுதலைப்புலிகளின் காலத்தில் 2001,ம் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது அதை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் மூலம் இரண்டாக உடைக்க துணைபோக வேண்டாம் தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர்களின் அரசியல் பலம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று 22/09/2018, களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் கிழக்குமகாணசபை தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரு பொதுச்சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தமிழர் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்ற தோரணையில் ஒரு கருத்துதாடலை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த கலந்துரையாடலில் சுமார் 12,அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இந்த கலந்துரையாடலை கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் கே.கோபலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கி.துரைராச்சிங்கம்,பாராளுமன்ற உறுப்புனர் ஞா.ஶ்ரீநேசன்,இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளர் பா.அரியநேத்திரன் ஆகியோர் சமூகம் கொடுத்திருந்தனர்.

இத்த சந்திப்பில் கருத்துரையாற்றிய பா.அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில்
கடந்த எழுபது வருடங்களாக வடகிழக்கு இணைந்த தாயக்கோட்பாடு ரீதியாக சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை அரசியலை நோக்கிய அரசியல் செயல்பாடுகள் முன்னெடுத்து வரும் நிலையில் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை போராட்டங்களும் அதன்பின் இளைஞர்கள் பல இயக்கள் ஆயுதரீதியான போராட்டம் அதனூடாக தமிழீழவிடுதலைப்புலிகளின் மிகவும் பெறுமதியான பாரிய போராட்டம் எல்லாம் ஏற்பட்டு 2009,மே,18 உடன் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுதப்போர் காலத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001,காலப்பகுதிகளில் பல விடுதலை இயக்கங்களையும் தமிழரசுகட்சியையும் ஒற்றுமைபடுத்தி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளின் ஒப்புதலுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது அன்று தொடக்கம் இன்றுவரையும் இணைந்தவடக்கு கிழக்கை தாயகமாக ஏற்று ஒரு கொள்கைரீதியான செயல்பாட்டு அரசியலைத்தான் தமிழ்தேசியகூட்டமைப்பு முன்எடுத்து வருகின்றது.

ஐம்பதாயிரம் மாவீர்கள் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ்மக்களின் உயிர்தியாகம் எல்லாமே வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் ஏற்பட்ட போராட்டமே தவிர வடக்கை வேறாகவும் கிழக்கை வேறாகவும் பிரிப்பதற்கு இல்லை.

தற்போது கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கொள்கையும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுதான் என இங்கு தலைமையாற்றும் கொபாலாகிருஷ்ணன் ஐயா தெளிவாக சொல்கிறார் இதை நாங்கள் வரவேற்கிறோம்
ஆனால் இங்கு சமூகம் தந்திருக்கும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்(TMVP ) கட்சியின் கொள்கை தனியான கிழக்குமாகாணத்தை மையப்படுத்திய அபிவிருத்தி அரசியலாகும் அப்படியானால் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு இணைப்பு கொள்கையை TMVP ஏற்றுள்ளதா?என்பதற்கு பதில்வேண்டும்.

அடுத்ததாக வடமாகாணம்,கிழக்குமகாணம் இரண்டுமாகாணசபை தேர்தல்களும் ஒரே தினத்தில்தான் இம்முறை இடம்பெற போகின்றது அப்படி இடம்பெறும்போது வடமகாணத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பு வீட்டு சின்னத்திலும் கிழக்கு மகாணத்தில் வேறொரு பொதுச்சின்னத்திலும் போட்டியிடும் போது இரண்டுவிதமான செய்திகள் வெளிவரும் ஒன்று வடமகாணத்தில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் கிழக்குமகாணத்தில் தமிழ்தேசியத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர் என்ற பிரசாரத்தை தென்பகுதி இனவாதிகளால் பரப்புவதற்கு வாய்ப்புக்களை நாமே ஏற்படுத்தி கொடுப்பதாக அமையும்.

கிழக்குதமிழர் ஒன்றியத்தில் உள்ள அனைவருமே எந்த அரசியல் கட்சியும் சாராத நடுநிலைவீதிகள் என்றுதான் இங்கு பேசப்பட்டது.ஆனால் தற்போது தலைமை தாங்கும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் கோபாலகிஷ்ணன் ஐயா இங்கு சமூகம் தந்திருக்கும் கலாநிதி விக்குனேஷ்வரனை தலைமையாக கொண்ட தமிழர் மகாசபை கட்சியின் பொதுச்செயலாளர் அதுமட்டுமல்ல கோபாலகிருஷ்ணன் ஐயா தொடர்சியாக நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக வெவ்வேறு அரசியல் கட்சி அல்லது சுயேட்சை குழுக்களில் வேட்பாளராக போட்டியிட்ட ஒரு அரசியல்வாதி என்பது எல்லோருக்கும் தெரியும் எனவும் மேலும