ஊடக முதுசம் பட்டம் வழங்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம் கெளரவிக்கப்பட்டார்

(எம்.என்.எம்.அப்ராஸ்)


ஊடகத்துறையில் 50 ஆண்டுகளாக சேவையாற்றிவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எ.எல்.எம் சலீம் அவர்களுக்கு கல்முனை மாநகர சபையினால் ஊடக முதுசம் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். நேற்று (20) நடைபெற்ற மாதாந்த அமர்வின்போது வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கும் பிரேரணையை தொடர்ந்தே குறித்த கெளரவ பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் முதல்வர் அலுவலகத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எ.எல்.எம் சலீம் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் பொன்னாடையும் போர்த்தி கெளரவிக்கப்பட்டார் .

இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி முதல்வர், ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சிரேஸ்ட ஊடகவியலாளருக்கு தெரிவித்துக்கொண்டனர்.