கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினால் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்குவதென தீர்மானம்.

பொருளாதாரத்தினை ஈட்டிக்கொள்வதில் ஈபடுகின்ற தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கென, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினால் உதவி வழங்குவதென, நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, தேசமகா சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினால், கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளுக்கும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.