தேசிய சம்மேளனத்தின் உபசெயலாளராக தெரிவானமைக்கு சம்பந்தர் மாவை வாழ்த்து!

(காரைதீவு  நிருபர் சகா)

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன பிரதேசசபை தலைவர்களின்
ஒன்றியத்தின் உப செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு பிரதேசசபைத்
தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புத்
தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைத்தமிழரசுக்கட்சித்தலைவர்   மாவை.சேனாதிராஜா உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைத்தமிழரசுக்கட்சித்தலைவர்  மாவை.சேனாதிராஜா
இலங்கைத்தமிழரசுக்கட்சிச் செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம்
ஆகியோர் வாழ்த்துகையில் கீழ்கண்டவாறு வாழ்த்தியுள்ளனர்.

கட்சியில்  தவிசாளர் ஜெயசிறிலின் பங்களிப்பு கணிசமானது. இளம்வயதில்
தவிசாளரான அவரது பன்முக ஆளுமைத்தன்மை இன்று தேசிய ரீதியில் 320 சபைகளுள்
தலைமைப்பீடத்திற்கு ஒருவராகத் தெரிவுசெய்யவைத்தது. அவரது
அர்ப்பணிப்புடனான மகத்தான மக்கள்சேவையே அவரை இன்று இறைவன் இந்த
உயர்நிலையில் வைத்துள்ளார். அவர் மேலும் பல சேவைகளைச்செய்து
பல்லாண்டுகாலம் வாழவாழ்த்துகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் இந்தப்புதிய
பதவிமூலமும் எமது மக்களுக்கு அளப்பரியசேவைகளைச்செய்ய தமது
வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் தலைவர்கள் முக்கிய
பிரமுகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.