படுவான்கரையில் தொடரும் சட்டவிரோத மாடுகள் மடக்கிப்பிடிப்பு : பண்டாரியாவெளியிலும் சற்றுமுன்னர் சம்பவம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்ற மாடுகளை, படுவான்கரை இளைஞர்களின் உதவியுடன் பொலிஸார் மடக்கிப்பிடித்த சம்பவம் இன்று(18) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமான முறையில் கால்நடையில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாடுகள் ஏழு இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத கடத்தல் தொடர்பில் இளைஞர்கள் வழங்கிய தகவலையடுத்து, கொக்கட்டிச்சோலை பொலிஸார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வருகைதந்து சட்டவிரோத மாடுகடத்தலை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலங்களாக படுவான்கரைப்பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதுடன், அவை மடக்கிப்பிடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.