பொத்துவில் தமிழ்மக்களின் காணி விரைவில் கையளிக்கப்படும்!

இலங்கை வனத்துறை உயரதிகாரி ஆர்பாட்டக்காரர்களிடம் தெரிவிப்பு!
கல்முனை விகாராதிபதி சங்கரத்ன மாநகரசபைஉறுப்பினர் ராஜனின் முற்சியால் வெற்றி!
(காரைதீவு  நிருபர் சகா)

 
பொத்துவில் ஊறணி கனகர் கிராம தமிழ்மக்களது காணிகள் யாவும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கிடைத்ததும் உடனடியாக விடுவிக்கப்படும்.
 
இவ்வாறு இலங்கையின் வனவளத்துறை உயரதிகாரியான மகிந்த செனவிரத்ன நேற்று(17) வெள்ளிக்கிழமை நண்பகல் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு கடந்த 4தினங்களாக நிலமீட்புப்போராட்டத்திலீலுபட்டுவரும் மக்களிடம் தெரிவித்தார்.
 
நேற்று(17) நான்காவதுநாளாக போராட்டத்திலீடுபட்டுவரும் மக்களைச்சந்திக்கவென கல்முனை  சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் சென்றிருந்தனர்.
 
அவர்கள் மக்களுடன் கலந்துரையாடிவிட்டு வனவளத்துறை அதிகாரிகளை அவ்விடத்தில் வரவழைத்தனர்.
 
அங்கு அப்பகுதிக்குப்பொறுப்பான லாகுகலைப் பிராந்திய வனத்துறை அதிகாரி கே.கே.எஸ்.ஆரியரத்னவும் சக உத்தியோகத்தர்களும் வந்திறங்கினர். அவர்களிடம் மக்களும் தேரரும் கலந்துரையாடினர்.
 
அவர் உடனே அம்பாறை மாவட்ட வனத்துறை அதிகாரி டி.முனசிங்கவுடன் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு போராட்டக்காரர்களுடன் வெளிப்படையாகப் பேசவைத்தார்.
 
மாவட்ட வனத்தறை அதிகாரி முனசிங்க மக்களிடம் தெரிவிக்கையில் நாம் இந்த காணிதொடர்பில் அதனை விடுவித்து மக்களிடம் வழங்கவேண்டும் என்று எமது சாதகமான அறிக்கையை கொழும்புக்கு அனுப்பிவிட்டோம். அங்கிருந்த பதில்வந்தால் அவற்றை அளந்து தரநடவடிக்கை எடுப்போம் என்றார்.
 
மேலும் அவர்இலங்கையின் வனவளத்துறையில் அதிஉச்சமேலதிகாரியுடன் பேசுவதற்கும் ஏற்பாடுசெய்தார்.
அதன்படி சிலநிமிடங்களில் கொழும்பிலிருந்து வனவளபாதுகாப்புத்துறை  உயரதிகாரி மகிந்த செனவிரத்ன தொலைபேசியில் மக்களுடன் சிங்களத்தில் பேசினார்.
 
அவர் அங்கிருந்து கூறுகையில்:
 அம்பாறை மாவட்டத்திலிருந்து கிடைத்த அறிக்கையை நாம் காணிக்குப் பொறுப்பான ஜனாதிபதி காணி ஆணைக்குழுவுக்கு எமது சிபார்சையும்வைத்து சமர்ப்பித்துள்ளோம்.
அந்த ஆணைக்குழுகூடி சாதகமான முடிவை இன்னும் ஒருசில வாரங்களுள் அறிவிக்கும். அந்த முடிவு கிடைக்கப்பெற்றதும் இப்பகுதியை துப்பரவாக்கி மக்களிடம் அளந்துகையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
உயரதிகாரியின் பதில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியபோதிலும் அந்த நல்லமுடிவு கிடைக்கப்பெறும்வரை தாம் அவ்விடத்தைவிட்டு அகலப்போவதில்லை என்று அங்கிருந்த வனஅதிகாரி ஆரியரத்னவிடம் தெரிவித்தனர்.
 
பின்பு வண.சங்கரத்னதேரர் உறுப்பினர் ராஜன் குழுவினருக்கு தங்களது பாழடைந்து காடுமண்டிக்கிடக்கும் வீடுவாசல்களை மக்கள் காட்டினர்.