படுவான்கரையில் இராணுவத்தின் அதிரடி நடவடிக்கை 5 உயிர்கள் காப்பாற்றப்பட்டது. (வீடியோ)

மணற்பிட்டி சந்தியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற வாகனம் மடக்கிப்பிடிப்பு.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணற்பிட்டி சந்தியில் வைத்து, மாடுகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற வாகனம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று(18) காலை இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் இருந்து, ஐந்து மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற சிறியரக கன்ரர் வாகனமே இராணுவத்தினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் மாடுகள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமையும்(17) இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஐந்து மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் இராணுவத்தினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.