களுவாஞ்சிகுடியில் வைத்தியரின் வீடு உடைத்து பட்டப்பகலில் நகையும் பணமும் கொள்ளை .

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீடொன்றினை உடைத்து 35 பவுண் நகையும் சிறுதொகை பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது வீட்டில் யாருமற்ற நிலையிலையில்  வெள்ளிக்கிழமை பி.ப 1 மணியளவிலையே இடம் பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

வைத்தியர் உட்பட வீட்டில் இருந்த அனைவரும் தமது உறவினரின் புதுமனை புகு விழாவொன்றிற்காக கல்லடிக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் பின்கதவினை சேதமின்றி உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.

இதன்போது வீட்டின் அனைத்து அறைகளையும் சோதனையிட்டு அங்கிருந்த 35 பவுண் நகையையும் நான்காயிரம் ரூபாய் பணதினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

பின்கதவானது திறக்கப்பட்டிருபதனை கண்ட அயல் வீட்டார் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். விரைந்து வந்த வீட்டுரிமையார்கள் தங்களது வீட்டில் இருந்து தங்களது ஆபரணங்களும் பணமும் கொள்ளையிடப்பட்டதனை அவதானித்து பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விரணைகளை முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தனர்…..பழுகாமம் நிருபர்