திருமலையில் பாடசாலைமாணவர்கள் பெண்பிள்ளைகளின் உடற்பருமன் அதிகரிக்கின்றது. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் பல பாடசாலை மாணவர்கள், பிள்ளைகளின் உடல் பருமன் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டு வருகிறது.அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் சமூதாயவைத்திய நிபுணர் டாக்டர் முரளி வல்லிபுரம் தெரிவித்தார்.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் தவிசாளர் டாக்டர் ஜி.ஞானகுணாளன் தலமையில் நடந்த இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பேசுகின்றபோதே இக்கருத்தை அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக பெண்பிள்ளைகளின் உடற்பருமன் அதிகரிப்பதால் பிற்காலத்தில் அவர்கள் எவ்வளவு தான் கல்வி கற்றாலும் அவர்களின் வாழ்வில் பல்வேறு சவால்களை எதிர் கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திருகோணமலை நகரில் 40 தொடக்கம் 50 வீதமான பிள்ளைகளுக்கு உடற்பருமன் அதிகரித்திருப்பதாகவே தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகையில் தெரிவித்தார்.எனவே பிள்ளைகளின் உடற்பருமனை கண்காணிக்கும் வகையில் மாதமொருமுறை நிறுத்தல்கருவிகள்மூலம் உடல் நிறையை அவதானித்து ஏற்ற நடவடிக்கை எடுத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இதற்கான ஆய்வகளை செய்வதற்கான முயற்சிகளை தாம்மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் பெண்பிள்ளைகள் பிற்காலத்தில் கருவடையும் தன்மையும் பாதிக்கப்பட இடமுண்டு எனவே அவர்களை குறைந்தது ஓருமணித்தியாலமாவது உடற்பயிற்சி செய்ய பெற்றார் நடவடிக்கை எடுக்கவேண்டும் சிறு பிள்ளைகளை குறைந்தது இரண்டு மணித்தியாலமாவது உடற்பயிற்சி செய்ய தூண்டுதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பிரதேச சபையின் உறுப்பினர்கள் உட்பட பிரதேச பையின் பிரதி தவிசாளரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.